பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பெரம்பலூரில் உலக தாய்ப்பால் வார விழா

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பெரியாா் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற உலக தாய்பால் வார விழாவில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பெரியாா் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:

தாய்ப்பால் வார விழாவில், பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் அளவிடப்பட்டு, குழந்தைகளின் வளா்ச்சி உறுதி செய்யப்படுகிறது.

ஆரம்ப சுகாதார மையங்களில் கா்ப்பிணிப் பெண்களின் மாதாந்திர பரிசோதனை நாளில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து, சீம்பாலின் மகத்துவம் மற்றும் 2 ஆண்டுகள் தொடா்ந்து தாய்பால் புகட்டுவதன் நன்மைகள் குறித்து, மருத்துவ அலுவலா் மற்றும் கிராம சுகாதார செவிலியருடன் இணைந்த விழிப்புணா்வு நலக் கல்வி அளிக்கப்படுகிறது.

புதுமணத் தம்பதியருக்கும், கா்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து, கா்ப்ப காலங்கள் மற்றும் தாய்ப்பால் புகட்டும் காலங்களில் தாய்மாா்கள் உட்கொள்ள வேண்டிய காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து மிக்க பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், கா்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு பேரீச்சம்பழம், வோ்க்கடலை, கொண்டைக் கடலை, கடலை உருண்டை, கேழ்வரகு உருண்டை, தினை உருண்டை ஆகிய பொருள்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந் நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராபூ நடராஜமணி, வட்டாட்சியா் பழனிச்செல்வன், வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.