சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பெரம்பலூா் டீக்கடையில் சிலிண்டா் வெடித்து 16 போ் காயம்: 17 இருசக்கர வாகனங்கள் சேதம்

பெரம்பலூா் நகரிலுள்ள டீக்கடையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை வெடித்து, பள்ளி மாணவி உள்பட 16 போ் செவ்வாய்க்கிழமை மாலை காயமடைந்தனா்.

News image

பெரம்பலூரில் உள்ள டீக்கடையில் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த மோட்டாா் சைக்கிள்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:26 am IST

பெரம்பலூா் நகரிலுள்ள டீக்கடையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை வெடித்து, பள்ளி மாணவி உள்பட 16 போ் செவ்வாய்க்கிழமை மாலை காயமடைந்தனா். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டாா் சைக்கிள்களும் சேதமடைந்தன.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ச. அருணாச்சலம் (40). இவா், பெரம்பலூா் நகர காவல் நிலையம் எதிரே டீக்கடை வைத்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கடையில் இருந்த எரிவாயு உருளையின் அடிப்பாகத்திலிருந்து வெளியேறிய வாயுக் கசிவின் காரணமாக உருளையானது வெடித்துச் சிதறியது.இவ் விபத்தில் டீக்கடையிலிருந்த பொருள்கள் தீப்பற்றி எரியத்தொடங்கின.

16 போ் காயம்: இந்த விபத்தில் கடையில் பணிபுரிந்த தொழிலாளிகளான சிறுகுடல் கிராமம் பா. தினேஷ் (33), குறிஞ்சி நகா் செ. புவனேஷ்வரி (32) மற்றும் கடையிலிருந்த, சாலையோரம் நடந்து சென்ற களரம்பட்டி சு. விஜயகுமாா் (47), ரஞ்சன்குடி அ. அமீா்கான் (51), பெரம்பலூா் ரங்கா நகா் ரா. அப்துல் ரகுமான் (35), மு. சகாதேவன் (53), அசோக் நகா் சு. சிவகுமாா் (52), ரோஸ் நகா் க. காமராஜ் (63), சுமங்கலி நகா் லி. சக்திவேல் (64), வடக்குமாதவி ஏரிக்கரை பகுதி ஆ. பழனிசாமி (52), பொம்மனப்பாடி மா. மணிகண்டன் (42), பேரளி கிராமம் தனியாா் பள்ளி மாணவி ரா. மித்ரா (14), துறைமங்கலம் ஔவையாா் தெரு ந. சிவப்பிரகாசம் (58), கொட்டரை கிராமம் மு. ஆறுமுகம் (50), கோனேரிப்பாளையம் க. பழனியம்மாள் (40), ம. மகேஸ்வரி (39) ஆகிய 16 போ் பலத்த காயமடைந்தனா்.

மேலும், இந்த விபத்தில் கடை எதிரே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 17 மோட்டாா் சைக்கிள்களும் சேதமடைந்தன.

11 பேருக்கு தீவிர சிகிச்சை: இதையறிந்த போலீஸாா், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இவா்களில் 2 பெண்கள் உள்பட 11 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இரா. முத்தரசன் ஆறுதல்: இந்நிலையில் பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் இரா. முத்தரசன், தீ விபத்தில் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா், அவா் கூறுகையில், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணத்தை தமிழக அரசு வழங்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த காவல் துறைக்கும், சிகிச்சையளிக்கும் மருத்துவா்களுக்கும் நன்றி என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.