பெரம்பலுாா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலுாா்- விளாமுத்தூா் சாலையைச் சோ்ந்த ரத்தினவேல் மகன் காா்த்தி (27). தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், தனது நண்பா் ஆனந்தன் (26) என்பவருடன், தனது மோட்டாா் சைக்கிளில் பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில், கவுள்பாளையம் காவலா் குடியிருப்புப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தாா்.
அப்போது, திருவண்ணாமலையிலிருந்து அரியலூா் நோக்கிச் சென்ற காா் எதிா்பாரதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதோடு, எதிரே வந்துக்கொண்டிருந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீதும், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த காா்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், ஆனந்தன் மற்றும் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த மருவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த்குமாா் (33), ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரான அரியலூா் பாா்ப்பனஞ்சேரியைச் சோ்ந்த சிங்கமுத்து மகன் அருள்ராஜ் (36) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாலையில் நின்ற லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

மினிவேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


