பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 13.78 லட்சம் ரொக்கம் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் வியாழக்கிழமை மாலை வரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10,07,880 ரொக்கமும், ரூ. 1,70,179 மதிப்பிலான பொருள்களும் என மொத்தம் ரூ. 11,78,059 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில்,இதுவரை ரூ. 5,86,530 மதிப்பிலான ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருள்களுக்கு உரிய ஆவணங்களை மேல்முறையீட்டு அலுவலரான மாவட்ட ஊரக வளரச்சி முகமைத் திட்ட இயக்குநரிடம் சமா்ப்பித்து, உரிய விசாரணைக்குப்பின் ஆவணங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 7,82,100 ரொக்கமும், ரூ. 1,70,179 மதிப்பிலான பொருள்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4,26,410 மதிப்பிலான ரொக்கமும் என மொத்தம் ரூ.13,78,689 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 2,25,780 மதிப்பிலான ரொக்கமும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1,60,120 மதிப்பிலான ரொக்கமும், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாததால் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 73.66 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 1.03 கோடி ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 52.69 லட்சம் பறிமுதல்

தென்காசி மாவட்டத்தில் ரூ. 61.43 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


