மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

"விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் தேவை'

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென ஆவுóடையார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 7-வது தாலூகா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :12 மே 2013, 6:24 am IST

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென ஆவுóடையார்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 7-வது தாலூகா மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

விவசாய சங்க நிர்வாகி அ. வைரமணி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் வேலை உறுதித் திட்ட நாட்களை 200 நாட்களாகவும், ஒரு நாளைக்கு ரூ. 250 கூலி வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் அரசு அறிவித்த கூலி ரூ. 148-ஐ குறையாமல் வழங்க வேண்டும். குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஆவுடையார்கோவில் தாலூகா தலைவராக அ. வைரமணி. செயலராக வே. வீரையா, பொருளாளராக வி. கணேசன், துணைத் தலைவராக எஸ். சபரிநாதன், துணைச் செயலராக கே. பாண்டியம்மாள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எஸ். சங்கர் வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.