அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கருகும் நெற்பயிரைக் காக்கக் கோரி ஆவுடையார்கோவிலில் ஆர்ப்பாட்டம்

கருகும் நெற்பயிர்களைக் காக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இந்திய விவசாயிகள் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:13 pm

DIN

கருகும் நெற்பயிர்களைக் காக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் இந்திய விவசாயிகள் காங்கிரஸ் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில விவசாயிகள் காங்கிரஸ் செயலர் ஆலடிக்காடு கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.  
முள் மேடு  பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆவுடையார்கோவில் பகுதியில் சாலைகளைச் செப்பனிடாத நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தைக் கண்டிப்பது, கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயம் பாதித்த அனைத்துப் பகுதிகளுக்கும் பயிர்க் காப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநிலத் தலைவர் மாரிமுத்து, நிர்வாகிகள் நீலகிருஷ்ணன், முத்துவீரப்பெருமாள், துரைராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.