புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இலங்கை அகதிகள் முகாமில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

குடிப்பழக்கத்தால் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:09 am

DIN

குடிப்பழக்கத்தால் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கையைச் சேர்ந்த ராஜூ மகன் சந்திரமோகன் (37). இவர் அறந்தாங்கி அருகே அழியாநிலை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். இவரது மனைவி  புவனேஷ்வரி. இவர்களுக்கு 1 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர். சந்திரமோகன் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டாம். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாம். இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம்போல தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு அனைவரும் தூங்கிவிட்டனர். செவ்வாய்க்கிழமை காலை பார்க்கும் போது, வீட்டின் உத்தரத்தில் சந்திரமோகன் தூக்கிட்டு இறந்து கிடந்தார். அறந்தாங்கி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.