விராலிமலை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் சௌமா தலைமை வகித்தார். இதில், மனித நேயமும் மக்கள் திலகமும், திரைப்படத் துறையில் எம்ஜிஆர் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில், வட்டாட்சியர் என். செல்வநாயகம், பள்ளி தலைமையாசிரியர் ஆர். சுரேஷ்(ஆண்கள்), கோ. ஜெயந்தி(பெண்கள்),ம. பூபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நூலகர் ஜெயராஜ் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.