பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அனைத்து ஊராட்சிகளில்  தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க வலியுறுத்தல்

வறட்சியை கருத்தில் கொண்டு அனைத்து ஊராட்சிகளில்  தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :9 ஜூலை 2018, 3:17 am

வறட்சியை கருத்தில் கொண்டு அனைத்து ஊராட்சிகளில்  தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கந்தர்வகோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எஸ்.ராசு தலைமை வகித்தார். இன்றைய அரசியல் நிலவரம், கட்சி செய்ய வேண்டிய இயக்க செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.மாதவன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்த மறியல் போராட்டத்தின் விளைவாக வட்டாட்சியர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் கந்தர்வகோட்டை-கறம்பக்குடி, கல்லுப்பட்டி-நத்தமாடிப்பட்டி,  பிசானத்தூர்-துருசுப்பட்டி ஆகிய சாலைகளின் சீரமைப்பு பணிகளை உடனடியாக துவக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் கழிப்பிடம் கட்டும் பணியை துரிதப்படுத்தி கட்டுமான பணியை உடனடியாக முடிக்க வேண்டும். ஒன்றியத்தில் நிலவும் வறட்சியை கருத்தில் கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்வரும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ்.ராஜேந்திரன், உ.அரசப்பன், கே.அம்பிகாபதி, ஆர்.கலியபெருமாள், டி.அம்பலராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.