தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காரைக்குடி-பட்டுக்கோட்டைக்கு விரைவில் ரயில் போக்குவரத்து

காரைக்குடியிலிருந்து  அறந்தாங்கி, பேராவூரணி வழியாக  பட்டுக்கோட்டைக்கு  மார்ச் மாதத்தில்  அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க வாய்ப்பிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 3:08 am

DIN

காரைக்குடியிலிருந்து  அறந்தாங்கி, பேராவூரணி வழியாக  பட்டுக்கோட்டைக்கு  மார்ச் மாதத்தில்  அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்க வாய்ப்பிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
காரைக்குடி - பட்டுக்கோட்டை, திருவாரூர்- திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன்பள்ளி இடையே  187 கி.மீ.  தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்க கடந்த 2012-ல் ரூ.  1700 கோடியில் பணிகள் தொடங்கின.
இதில் தற்போது  காரைக்குடி முதல் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை  இடையேயான 73 கி.மீ.  அகல ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்து, இந்தப் பாதையில் ஆய்வு  பணி மேற்கொள்ளப்பட்டது.  
இதற்காக காரைக்குடி ரயில் நிலையத்தில்  புதன்கிழமை பூஜை நடைபெற்று,  தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ. மனோகரன் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, தலைமை நிர்வாக அலுவலர் சுதாகர்ராவ்  உள்ளிட்டோர்  தலைமையிலான அதிகாரிகள் குழுவினர்  5  டிராலிகளில் சென்று ரயில் பாதைகள்,  ரயில்வே பாலங்கள், சிக்னல்கள், ரயில் நிலையங்கள்  ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.  
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது  காரைக்குடி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 255 சிறிய பாலங்கள், 14 பெரிய பாலங்கள் உள்ளன. வியாழக்கிழமை இப் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.  
இது வெற்றிகரமாக முடிவுற்றதும்  இதுகுறித்த அறிக்கை  உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் ரயில் போக்குவரத்து தொடங்கும் நாளை  முடிவு செய்து  அவர்கள் அறிவிப்பர். 
அநேகமாக மார்ச் மாதத்தில் இத் தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கலாம் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.