எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சப்பேட்டையில் ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் மற்றும் புதுகை மாவட்ட

Updated On :12 செப்டம்பர் 2018, 7:48 am IST

கந்தர்வகோட்டை அடுத்த மஞ்சப்பேட்டையில் ஸ்கார்ப் இந்தியா மனச்சிதைவு ஆராய்ச்சி மையம் மற்றும் புதுகை மாவட்ட கிராம தொலைதூர மனநல சேவை மையம் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முகாமில், மனநல ஆராய்ச்சி மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு மனநோய் பற்றியும், மனநல விழிப்புணர்வு பற்றியும், தற்கொலை தடுப்பு வழிகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். மேலும் மனநலம் மற்றும் மூளை வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அரசு மூலம் கிடைக்கும் உதவிகள் பற்றியும் எடுத்துக் கூறினார். முகாமில், மஞ்சப்பேட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், கிராம மகளிர் குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மற்றும் சமுதாயக் குழு உறுப்பினர்கள், சேகர், ரமேஷ் உள்பட கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.