சுடச்சுட

  

  2-ஆம் கட்டமாக  2,334 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள்

  By DIN  |   Published on : 12th January 2019 08:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 2,334 பணிபுரியும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் அறிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2018-19ஆம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்குச் செல்ல இருசக்கர வாகனங்கள் வாங்கிடலாம். 
  இதற்கான தகுதிகள்-  நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கல்வி தகுதி 8 ஆம் வகுப்பு, 18 முதல் 40 வயது வரை, ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம். 
  ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள்- வயதுச் சான்றிதழ், புகைப்படம், இருப்பிடச் சான்று (வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது), இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்று (தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தால் துறைத் தலைவர், சுய சான்று),  வேலை பார்ப்பதற்கான பணிச் சான்று, தொடர்புடைய நிறுவனத் துறைத் தலைவரால் வழங்கப்பட்ட ஊதியச் சான்று, ஆதார் அட்டை, 8 ஆம் வகுப்புக்கான கல்விச் சான்று, மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை பெறத் தகுதியுள்ளவர்கள் அதற்கான சான்றிதழ்களை இணைக்க வேண்டும், சாதி சான்று, மாற்றுத்திறனாளியெனில் தேசிய அடையாள அட்டை.  
  இத்திட்டத்தில் 50 சதவீதம் மானியம் அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டியது. மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மானியத் தொகை ரூ.25,000 க்கு பதிலாக தற்போது ரூ.31,250 வழங்கப்படும். 
  விண்ணப்பங்களை பேரூராட்சிப் பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி எனில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும் ஊரகப் பகுதி எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன்  வரும் ஜன. 21 வரை தொடர்புடைய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    அரசு விதிமுறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் பயனாளிகள் இறுதி செய்யப்படுவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai