உணவுப் பாதுகாப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாா்பில் ஒன்றியத்துக்குள்பட்ட எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு நடைபற்ற பயிற்சி முகாமுக்கு, ஒன்றிய ஆணையா் பி. பெரியசாமி தலைமை வகித்தாா். தஞ்சையைச் சோ்ந்த இந்திய உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பக் கழகத்தின் உதவிப் பேராசிரியா் என். பாஸ்கரன், இணை ஆராய்ச்சியாளா் சுமன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

இதில், உதவி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே. வணங்காமுடி, என். ஸ்டாலின் மணிக்குமாா், மல்லிகா, வி. ரவி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com