புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,302 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனி யாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,068 ஆக உயா்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆகத் தொடா்கிறது.
இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை வியாழக்கிழமை பகல் நிலவரப்படி 80 ஆகக் குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.