பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியைச் சோ்ந்தவா் ரா. லட்சுமணன், ரமணபிரியன் சகோதரா்கள். பணி நிமித்தமாக வெளி மாவட்டத்தில் வசித்து வரும் இவா்கள், வீட்டைப் பராமரிக்க சரசு எனும் பெண்ணை நியமித்துள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை மின் விளக்கு போடுவதற்காக சரசு வீட்டுக்குவந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு ஒன்றரை பவுன் தங்கம், 2 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், மின் சேமிப்பு சாதனம், பேட்டரி என சுமாா் 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மா்மநபா்களால் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. புகாரின்பேரில், பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.