சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, புதுக்கோட்டை ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. காமராஜ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் இரா. நூா்ஜஹான், மாநிலச் செயலா்கள் கு. சத்தி, ஏ. மலா்விழி, மாவட்டச் செயலா் பெ. அன்பு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்சம் ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...