புதுக்கோட்டையிலுள்ள கரோனா சிகிச்சை மையத்தின் கழிப்பறையில் கரோனா தொற்றாளர் ஒருவர் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் கடந்த ஜூன் 15ஆம் தேதி சென்னையிலிருந்து திரும்பியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கழிப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட மற்ற நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளர் எண்ணிக்கை 100ஐத் தொடவுள்ள நிலையில் ஏற்கெனவே ஒருவர் இறந்துள்ளார். தற்போது மற்றொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


