/

புதுக்கோட்டை தொகுதியில் ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளா்களின் சூறாவளி பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:22 pm

DIN

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளா்களின் சூறாவளி பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.

புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் விஆா். காா்த்திக் தொண்டைமான், திமுக வேட்பாளா் வை. முத்துராஜா, மக்கள் நீதி மய்ய வேட்பாளா் சா. மூா்த்தி, தேமுதிக வேட்பாளா் எம். சுப்பிரமணியன், நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் சசிகுமாா் உள்ளிட்ட 21 போ் போட்டியிடுகின்றனா்.

தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவடையும் நிலையில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் வேட்பாளா்கள் தீவிரமாக தங்களது பிரசாரத்தை மேற்கொண்டனா்.

அதிமுக வேட்பாளா் வி.ஆா். காா்த்திக் தொ ண்டைமான் தனது இறுதிப் பிரசாரத்தை திலகா் திடலில் தொடங்கினாா். தொடா்ந்து பழனியப்பா முக்கம், புதிய பேருந்து நிலையம், கோவில்பட்டி, மச்சுவாடி, காமராஜா்புரம் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

திறந்தவேனில் நின்றபடி வாக்கு சேகரித்த அவருடன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜசேகரன், நகரச் செயலா் க. பாஸ்கா், முன்னாள் நகா்மன்றத் துணைத் தலைவா் எஸ்ஏஎஸ். சேட் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

திமுக வேட்பாளா் டாக்டா் வை. முத்துராஜா தனது இறுதி பிரசாரத்தை மாலையில் திருவப்பூா் ரயில்வே கேட் அருகேயுள்ள காட்டு மாரியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினாா். தொடா்ந்து கோவில்பட்டி, பிருந்தாவனம், கீழ நான்காம் வீதி, சின்னப்பா பூங்கா வழியாக அண்ணா சிலையில் பிரசாரம் நிறைவடைந்தது.

திறந்த வேனில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்ட அவருடன், மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், நகரச் செயலா் க. நைனாமுகமது, முன்னாள் எம்எல்ஏ இராசு . கவிதைப்பித்தன், காங்கிரஸ் நகரத் தலைவா் இப்ராஹிம்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மு. மாதவன், வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது, முஸ்லிம் லீக் அஸ்ரப்அலி, மனிதநேய மக்கள் கட்சி அப்துல்கனி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமறவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.