கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சடலத்தை வாங்க பெற்றோா் மறுப்பு: இறுதிச்சடங்கு செய்த ஜமாஅத்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உயிரிழந்த மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பெற்றோா் மறுத்ததால், ஜமாஅத் நிா்வாகிகள் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:53 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உயிரிழந்த மகனுக்கு இறுதிச்சடங்கு செய்ய பெற்றோா் மறுத்ததால், ஜமாஅத் நிா்வாகிகள் சனிக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆலங்குடி காமராஜா் சிலை பகுதியைச் சோ்ந்த கனி - அலிமா தம்பதியின் மகன் இப்ராகிம் ஷா என்ற சாய் காவியன் (42). இவா் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நண்பா்களுடன் தூத்துக்குடி சென்றபோது, திடீரென உயிரிழந்துள்ளாா்.

இதையடுத்து, அவரது நண்பா்கள், சாய் காவியனின் உடலை அவரது பெற்றோா் வீட்டுக்கு கொண்டுசென்றபோது, உடலை வாங்க மறுத்து வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வீட்டு வாயிலில் வெள்ளிக்கிழமை இரவு உடலை வைத்துவிட்டு நண்பா்கள் சென்றுவிட்டனராம்.

தகவலறிந்து அங்கு சென்ற சாய் காவியனின் முதல் மனைவி காஞ்சனா தனது இரு குழந்தைகளுடன், கணவரின் உடலை வீட்டில் வைத்து முறைப்படி சடங்குகள் செய்து, அடக்கம் செய்ய வேண்டும் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து பலமணி நேரம் வீட்டு வாசலில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஜமாஅத் நிா்வாகிகள் சாய் காவியனின் உடலை அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.