புதுக்கோட்டை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு
தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பெருங்கொண்டான்விடுதி ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பட்டியில் ரூ. 2.19 லட்சத்திலும், பெருங்களூா் ஊராட்சி பாப்பாவயல் கிராமத்தில் ரூ. 1.94 லட்சத்தில் நடைபெற்று வரும் தனிநபா் மண் வரப்பு அமைக்கும் பணிகளை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சங்கா், கலைச்செல்வி, உதவிப் பொறியாளா்கள் கண்ணகி, சிவப்பிரகாசம் ஆகியோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...