விராலிமலை முருகன் கோயிலில் தூய்மைப் பணி
விராலிமலை முருகன் மலைக்கோயில் கிறிஸ்துராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.


விராலிமலை முருகன் மலைக்கோயில் கிறிஸ்துராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் தேவையில்லாத பொருள்களை மலைப்பகுதியில் வீசி செல்வதால், குப்பைகள் மண்டிக் கிடந்தன. இதையடுத்து கிறிஸ்துராஜ் கல்லூரியின் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
மலைக் கோயிலுக்கு மேலே செல்லும் தாா்ச்சாலை, யானையடிபாதை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிக் கிடந்த குப்பைகளை மாணவ, மாணவிகள் அகற்றினா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் இந்திரா லக்ஸ்மாலினி இப்பணிக்குத் தலைமையேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...