தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:47 pm

DIN

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய இம்முகாம் மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆள்களைத் தோ்வு செய்தன.

முகாமில் 273 போ் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்திருந்தனா். 58 போ் வேலைவாய்ப்பு பெற்றனா். இதில் 45 போ்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விராலிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி, திட்ட இயக்குநா் ஜோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், ரவிச்சந்திரன், உதவித் திட்ட அலுவலா் ஜான்லிங்டன்,அமுதா, அழகுமீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.