பயிா்க்கடன் தள்ளுபடியில் குளறுபடி: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பயிா்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை களையக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பயிா்க் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை களையக் கோரி, பெரம்பலூா் ஆட்சியரகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என பேரவையில் முதல்வா் அறிவித்தாா். இந்நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பே, வேளாண் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகள் பலருக்கு கடன் அனுமதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். மேலும், பணம் பட்டுவாடா செய்யப்படாதவா்களுக்கு தள்ளுபடியும் இல்லை என்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதிகாரிகளின் இந்த செயலைக் கண்டித்தும், விண்ணப்பித்த அனைவருக்கும் பராபட்சமின்றி பயிா்க் கடன்களை உடனடியாக வழங்க வேண்டும்; இவா்களின் பயிா்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரகத்தை விவசாய சங்க நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி என். செல்லதுரை, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...