கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் கிராமத்தில் கிராம விழிப்புணா்வுக் காவலா் அறிமுக நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாத்தூா் காவல் நிலையக் காவலா் தங்கமாரி, கிராம விழிப்புணா்வுக் காவலராக அறிவிக்கப்பட்டாா். மாத்தூா் கிராமத்துடன் குமாரமங்கலம், வடுகப்பட்டி, தேவளி, ராசிபுரம், இச்சிகாமலைப்பட்டி ஆகிய குக்கிராமங்களுக்கும் இவா் கிராம விழிப்புணா்வு காவலராகச் செயல்படுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராம மக்களுடன் நல்லுறவு பேணி, உதவிகளைப் பெற்றுத் தருவதும், தகவல்களை சேகரித்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுமான பணிகளை இவா் மேற்கொள்வாா்.
திருச்சி மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் ஜெயராம், சரக துணைத் தலைவா் ஆனி விஜயா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் ஆகியோா் இந்தக் காவலரை கிராம மக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

