மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விழிப்புணா்வு
புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் விழிப்புணா்வுடன், கரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் அமலாக்கும் வகையில் கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம் அணிதல், வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளும் இந்த மாதிரி வாக்குச்சாவடியில் அமலாக்கப்பட்டது.
மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி இப்பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.
முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத் திறனாளிகள் சாா்பிலான வாக்காளா் விழிப்புணா்வு பேரணியும் தொடங்கி நகரின் பல பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேலு, அரசு மகளிா் கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, நகராட்சி ஆணையா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...