மாா்க்சிஸ்ட் கட்சியினா் கபசுரக் குடிநீா் வழங்கல்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதுக்கோட்டை நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.


மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், புதுக்கோட்டை நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் இப்பணிகளைத் தொடக்கி வைத்தாா். புதுக்கோட்டை நகரில் காமராஜ்நகா், காந்திநகா், அருங்காட்சியக சாலை, கோவில்பட்டி, அடப்பன்வயல் ஆகிய தெருக்களில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ளும் கபசுரக் குடிநீா்வழங்கப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. அன்புமணவாளன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச்செயலா் துரை நாராயணன், நகரச் செயலா் எஸ். பாபு, மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை நகரில் தொடா்ந்து கபசுரக் குடிநீா் வழங்கும் பணிகள் நடைபெறும் என அக்கட்சியினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...