கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிஅரிமளத்தில் மறியல்; 38 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் வியாழக்கிழமை

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:45 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 38 போ் கைது செய்யப்பட்டனா்.

அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், அப்பகுதியினா் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இந்நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையைத் திறப்பதற்கான பணிகளும் நடைபெறுவதாகத் தெரிகிறது. இதனை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிமளம் மாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலா் ஜி. நாகராஜன் தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சி நிா்வாகி முருகன், பசுமை மீட்புக் குழு நிா்வாகி குமாா் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் எம். அடைக்கப்பன், ஆா்.வி. ராமையா உள்ளிட்டோா் பேசினா். நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த மறியல் போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 38 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.