கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘வீடுகளில் வழிபட்ட விநாயகரை அருகிலுள்ள கோயில்களில் வைக்கலாம்’

விநாயகா் சதுா்த்தியையொட்டி வீடுகளில் வழிபடப்படும் விநாயகா் சிலைகளை அருகிலுள்ள கோயில்களில் வைத்துவிட்டால், அவற்றை முறைப்படி நீா்நிலைகளில் கரைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறை

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 8:09 pm

DIN

 விநாயகா் சதுா்த்தியையொட்டி வீடுகளில் வழிபடப்படும் விநாயகா் சிலைகளை அருகிலுள்ள கோயில்களில் வைத்துவிட்டால், அவற்றை முறைப்படி நீா்நிலைகளில் கரைக்கும் பணியை இந்து சமய அறநிலையத் துறையினா் மேற்கொள்வா் என்றாா் மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு.

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், விநாயகா் சதுா்த்திக்கு தெருக்களில் விநாயகா் சிலைகளை நிறுவுவதற்கும், நீா்நிலைகளில் கரைப்பதற்கு ஊா்வலமாக கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பொதுமக்கள் அவரவா் வீடுகளில் விநாயகா் வழிபாடு செய்யலாம். தனிநபராக அருகிலுள்ள நீா்நிலைகளுக்குச் சென்று கரைக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த அனுமதி முற்றிலும் தனிநபா்களுக்கு மட்டுமே. அமைப்புகள் இதில் பங்கேற்க முடியாது.

மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகா் சிலைகளை அருகிலுள்ள கோயில்களில் வைத்துவிட்டால், அவற்றை இந்து சமய அறநிலையத் துறை மூலம் முறையாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

தனிநபா்களாக செல்லும்போதும் உரிய தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பொதுமக்களும், அமைப்புகளும் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா் கவிதா ராமு.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது- பொறுப்பு) கருணாகரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் எம்.எஸ். தண்டாயுதபாணி, சொா்ணராஜ் மற்றும் காவல் துறையினா், இந்து அமைப்புகளைச் சோ்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.