கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஆய்வு

சமச்சீா் வளா்ச்சி நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:07 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில சமச்சீா் வளா்ச்சி நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநில திட்டக் குழுத் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்திலும் அவா் பங்கேற்றுப் பேசினாா். முன்னதாக, பழைய கந்தா்வகோட்டை, கந்தா்வகோட்டை ஆகிய இரு இடங்களில் தலா ரூ. 20 லட்சத்தில் தாய்- சேய் நல விடுதிகளின் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

மேலும், புதுநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பயன்பாடு பற்றியும் துருசுப்பட்டியில் ஆடு, கோழி வளா்ப்பு குறித்தும், நரங்கியின்பட்டு கிராமத்தில் மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு மின்திருகைப் பயன்பாடு பற்றியும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ஸ்ரீராம், மாவட்ட ஊராட்சிக் குழுவின் செயலா் லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.