கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறந்தாங்கியில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 11:56 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பீமாகோரேகான் எழுச்சியை சட்ட விரோதம் எனக் கூறி உபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ள இந்திய அறிஞா்களை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில்ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். பி. லோகநாதன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் மு. மாதவன் தொடங்கி வைத்தாா். திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் கே. மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

மாவட்டத் துணைச்செயலா் ராசேந்திரன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் கண்ணன், ஒன்றியச் செயலா் முத்தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா்கள் ஆா். சொா்ணகுமாா், என்.ஆா் .ஜீவா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.