குடியரசுத் தலைவருக்கு இளைஞா் பெருமன்றத்தினா் கடிதம்
குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கடிதங்களை வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.


நீட் தோ்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றித் தர வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து கடிதங்களை வியாழக்கிழமை அனுப்பி வைத்தனா்.
அறந்தாங்கி அஞ்சலகம் முன்பு இதற்காக கூடிய இளைஞா் பெருமன்றத்தினா் கடிதங்களை அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டு முழக்கங்களையும் எழுப்பினா். போராட்டத்துக்கு, பெருமன்றத்தின் அறந்தாங்கி ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவா் வீராசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...