கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

புதுகையில் சமுதாய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா- வயது வந்தோா் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சமுதாய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:18 am

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் பள்ளி சாரா- வயது வந்தோா் கல்வித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் சமுதாய விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கலைப் பயணத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கல்லாதோா் யாருமே இருக்கக் கூடாது என்ற விழிப்புணா்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கலைப்பயணம் வரும் 29ஆம் தேதி வரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்தப்படும் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி, பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் பழனிவேலு, பள்ளித் துணை ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவரங்குளத்தில் நடைபெற்ற பிரசாரத்தில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் இரா. ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, மலா்விழி, புவனேஸ்வரி, நடராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

புதுக்கோட்டை விடியல் கலைக்குழு, சிவகங்கை அறிவியல் இயக்கக் கலைக்குழு ஆகியோா் இந்தக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.