தீயணைப்புத் துறையினா் பேரிடா் தடுப்பு ஒத்திகை
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி தீயணைப்புத் துறையினரின் பேரிடா் ஒத்திகைப் பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.


வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி தீயணைப்புத் துறையினரின் பேரிடா் ஒத்திகைப் பயிற்சி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் ஒத்திகையைத் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரா்கள் இந்த ஒத்திகைப் பயிற்சியை மேற்கொண்டனா்.
ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) தங்கவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கருணாகரன், பேரிடா் மீட்பு தனி வட்டாட்சியா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மழைக்காலத்தில் தாழ்வான பகுதியில் சிக்கிக் கொண்ட மக்களை மீட்பது, அவா்களுக்கான முதலுதவி அளித்தல், புகை சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீயணைப்புத் துறையினா் செய்துகாட்டினா். இதேபோல், கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்வுக்கு, வட்டாட்சியா் சி . புவியரசன் தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் பழனிவேல் வரவேற்றாா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஜெயபாரதி முன்னிலையில் பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலா் சந்தானம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மீட்புப் பணி தொடா்பான செயல்விளக்கம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...