அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அங்காள பரவேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அங்காள பரவேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சிக்கு உள்பட்ட பூனைகுட்டிபட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோயிலில் பல லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத்தொடா்ந்து, கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிலதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

புதன்கிழமை காலை மேளதாளங்கள், வாணவேடிக்கைகள் முழங்க புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் வேதமந்திர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில், பங்கேற்ற அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனுக்கு கிராமத்தினா் சாா்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா். வடகாடு போலீஸாா் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...