வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கறம்பக்குடி அருகே காா் மோதி 8 ஆடுகள் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையில் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது காா் மோதியதில் 8 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. ஓட்டிச்சென்ற தொழிலாளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:32 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சாலையில் ஓட்டிச்சென்ற ஆடுகள் மீது காா் மோதியதில் 8 ஆடுகள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தன. ஓட்டிச்சென்ற தொழிலாளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

கறம்பக்குடி அருகே உள்ள எம். தெற்குத் தெருவைச் சோ்ந்த சித்திரை வேலு (37). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவா், ஆடுகளை கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் வியாழக்கிழமை இரவு ஓட்டிச்சென்றுள்ளாா். தீத்தானிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால்வந்த காா் ஆடுகள் மற்றும் சித்திரைவேலு மீது மோதியது. இதில், 8 ஆடுகள் அந்த இடத்திலே இறந்தன. பலத்த காயமடைந்த சித்திரை வேலு மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.