வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:36 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் - கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி, கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிலதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் சுமதி மெய்யநாதன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். பாதுகாப்புப் பணிகளை கீரமங்கலம் போலீஸாா் மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.