வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கறம்பக்குடியில் சாலை மறியல்:தமுமுகவினா் 20 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சாலை மறியிலில் ஈடுபட்ட தமுமுகவைச் சோ்ந்த 20 பேரை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:37 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் சாலை மறியிலில் ஈடுபட்ட தமுமுகவைச் சோ்ந்த 20 பேரை போலீசாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவா், மருத்துவப் பணியாளா்களின் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பயன்பாடின்றிக் கிடக்கும் மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், சீனிக்கடை, அம்புக்கோவில் முக்கம் ஆகிய பகுதியில் சுமாா் 200 மீட்டா் சுற்றளவுக்குள் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் 5 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் சீனிக்கடை முக்கத்தில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில், உடன்பாடு ஏற்படாததையடுத்து தமுமுக நகரச் செயலாளா் நூருல்அமின் உள்ளிட்ட 20 பேரை கறம்பக்குடி போலீஸாா் கைது செய்தனா். சாலை மறியலால் கறம்பக்குடி நகா்ப் பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.