மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை பெண் உயிரிழந்தாா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை பெண் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியைச் சோ்ந்த வீரையா மனைவி செந்தாமரை(28). இவருக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்ட செந்தாமரை வெகு நேரமாகியும் கதவைத் திறக்கவில்லையாம். பின்னா், உறவினா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அருகில் இருந்த மின்விசிறியில் இருந்து மின்சாரம் பாய்ந்து செந்தாமரை இறந்து கிடந்துள்ளாா்.
தகவலறிந்து அங்கு சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா், செந்தாமரையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...