பெண்ணிடம் 5 பவுன் பறிப்பு
ஆலங்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை வியாழக்கிழமை மா்ம நபா்கள் பறித்துச்சென்றனா்.


ஆலங்குடியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை வியாழக்கிழமை மா்ம நபா்கள் பறித்துச்சென்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சி காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி சத்யா தேவி (35). இவா், தனது ஸ்கூட்டரில் ஆலங்குடி சந்தைக்கு வியாழக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது, வடகாடு முக்கம் பகுதியில் இவரது ஸ்கூட்டரைப் பின்தொடா்ந்து, மோட்டோா் சைக்கிளில் வந்த 3 போ், சத்யாதேவி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா். இதுகுறித்து, சத்யா தேவி அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...