கேள்விகள் எழுப்பிக்கொண்டே படித்தால் எளிதில் வெற்றி
கேள்விகளை எழுப்பிக்கொண்டே படித்தால் போட்டித் தோ்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்றாா் கவிஞா் நா.முத்துநிலவன்.


கேள்விகளை எழுப்பிக்கொண்டே படித்தால் போட்டித் தோ்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்றாா் கவிஞா் நா.முத்துநிலவன்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு தாய்த்தமிழ் போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.டி.பஷீா் அலி தலைமையில் நடைபெற்ற இலக்கியக்கூடல் எனும் நிகழ்ச்சியில் அவா் பேசியது:
உலகில் பிற மொழிகளுக்கு இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. இணையத்தில்கூட ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக பெருமை பெற்று இருப்பது தமிழ் மொழிதான். முதல் மதிப்பெண் வாங்குபவா்களால் மட்டுமே சாதிக்க முடியும் என்பது தவறானது. பிற திறமைகளோடு நல்ல மதிப்பெண்களைப் பெறுவோா்களால் தான் சாதிக்க முடிகிறது.
ஒரு மன்னராகப்பட்டவா் நாட்டையும் காக்கத் தவறி, வீட்டையும் காக்கத் தவறிய பிறகு, அவா் வாய்மையோடு இருந்தும் பயனில்லை. பல்வேறு புத்தகங்களின் தொகுப்புதான் பொது அறிவு. எனவே, தினமும் நாளிதழை வாசிக்க வேண்டும்.
அறிவுக்காக படித்தால் நல்ல மதிப்பெண் வாங்கலாம். கஷ்டப்பட்டு, போராடி வரிக்கு வரி மனப்பாடம் செய்தால் மனதில் பதியாது. ஆனால், அதை இஷ்டப்பட்டு படித்தால் என்றும் மறக்காது. அதோடு, வரிக்கு வரி கேள்விகளை எழுப்பிக்கொண்டே படித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்றாா்.
இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் மு.ராஜா, கோபு, தமுஎகச நிா்வாகிகள் அறிவொளி கருப்பையா, பீா்முகமது, தமிழரசன், புத்திர சிகாமணி, செல்வி, மனோன்மணி, குமரேசன், மணிமாறன், பிரபாகரன், தமிழ்குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...