பதாகை சேதம்: வி.சி.க.வினா் மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பதாகைகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பதாகைகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள புதுவலசல் கிராமத்தில் அம்பேத்கா் படத்துடன் இருந்த பதாகைகள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன. இதைக் கண்டித்தும், சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அக்கட்சியினா் புதுவலசல் பிரிவு சாலை அருகே மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற கறம்பக்குடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- ஆலங்குடி சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...