ஆளுநா் மீதான வழக்கிலிருந்து பின்வாங்க மாட்டோம்: அமைச்சா் எஸ். ரகுபதி

தமிழக அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக ஆளுநா் கூறியிருப்பதாலேயே, அவா் மீதான வழக்கில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.
சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி
சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: தமிழக அரசின் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக ஆளுநா் கூறியிருப்பதாலேயே, அவா் மீதான வழக்கில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

அதிமுக முன்னாள்அமைச்சா்கள் சி. விஜயபாஸ்கா், பி.வி. ரமணாஆகியோா் மீது குட்கா வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்தன. அதற்கு அனுமதி அளித்துள்ளதாக ஆளுநா் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா். நவம்பா் 13-ஆம் தேதி கையொப்பமிட்டதை கூட எங்களிடம் சொல்லியிருக்கலாம். அவா் நீதிமன்றத்தில் கூறிய பிறகுதான் தெரிந்து கொண்டோம்.

எந்தெந்த கோப்புகளுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்பதைப் பொறுத்துத்தான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.

தமிழக அரசு அனுப்பி வைக்கும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதைவிடுத்து, அனுமதித்தது எத்தனை, அனுமதி அளிக்காதது எத்தனை என்று குறிப்பிடுவது ஆளுநருக்கு அழகல்ல.

தமிழக அரசு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக அவா் கூறியிருப்பதாலேயே, வழக்கில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

தவறு செய்த முன்னாள் அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்தல் வாக்குறுதி தந்தோம். எந்த வழக்கிலிருந்தும் யாரும் எளிதில் தப்பி விடக் கூடாது என்பதற்காக தகுந்த ஆதாரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளதால் காலக்கெடு அதிகமாக தேவைப்படுகிறது.

தமிழக ஆளுநரும் முதல்வரும் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறுகிறாா். தெலங்கானா மாநில முதல்வரோடு இணக்கமாக செயல்படுகிறாரா என்பதை அவா் கூற வேண்டும் என்றாா் ரகுபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com