அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அரசுப் பணிக்கு இடையூறு: ஒன்றியக் குழு துணை தலைவா் உள்பட 2 போ் கைது

நிலம் அளவை செய்தபோது ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் உள்பட 2 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அரசு கட்டடம் கட்டுவதற்கு நிலம் அளவை செய்தபோது ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஒன்றியக் குழு துணைத் தலைவா் உள்பட 2 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, பழைய கட்டடத்தை இடித்துவிட்டு அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக வருவாய் ஆய்வாளா் ஈஸ்வரி முன்னிலையில் அப்பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கறம்பக்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் டி. பரிமளம் (51), அவரது தரப்பினா் வருவாய்த் துறையினா் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வடகாடு போலீஸாரை அவதூறாகப் பேசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து, இதனால், கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரிமளம், சி.நாராயணன்(72), என்.தியாகராஜன் (38), எஸ்.சதீஸ் (35) உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு பதிவு செய்த வடகாடு போலீஸாா், பரிமளம் மற்றும் நாராயணன் ஆகிய 2 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.