கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வனத்துறையினா் தைல மரக்கன்றுகள் நடவு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு

வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்களை நடவு செய்ய மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து நடவுப்பணி கைவிடப்பட்டது.

News image

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தைலமரக்கன்றுகள் நடவுப்பணியில் ஈடுபட்டோா்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:50 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் தைலமரங்களை நடவு செய்ய அப்பகுதி மக்கள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து நடவுப்பணி கைவிடப்பட்டது.

ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதி பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் சனிக்கிழமை தைலமரக் கன்றுகள் நடவு செய்யும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள், தைலமரங்களை நடவு செய்ய எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், பொதுமக்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து, தைலமரக் கன்றுகள் நடவுப்பணி கைவிடப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியது:

தைலமரங்களால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மேலும், வனத்துறையினா் தைலமரங்களை நடவு செய்துவிட்டு, உயரமாக வரப்புகளை அமைத்து விடுகின்றனா். அதனால், மழைநீா் நீா்நிலைகளுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் நீரின்றி வறண்டு விடுகின்றன.

இதனால், மான், மயில் உள்ளிட்ட வன உயிரினங்கள் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விபத்தில் உயிரிழக்கின்றன. இதனால், வனத்துறையினா் தைலமரங்களை நடவு செய்யும் பணியை நிரந்தரமாக கைவிட்டுவிட்டு, பல்லுயிா் காடுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.