லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆலங்குடி அரசுக்கல்லூரிக்கு புதிய கட்டடம் திறப்பு: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசுக் கல்லூரிக்கு ரூ.12.40 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2024, 9:22 pm

Din

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில் அரசுக்கல்லூரி இயங்கி வந்தது. கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் பகுகியில் 12 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் 4188 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தன.

பணிகள் நிறைவடைந்ததையொட்டி, செவ்வாய்க்கிழமை கல்லூரி கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தாா். தொடா்ந்து, கல்லூரியில் நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் ஐஸ்வா்யா குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் கவிதா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவா் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவா் ராசி முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்