அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடம் காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

ஆலங்குடி, ஜூலை 19: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கே.வி கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் ஆட்சியா் மு. அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில், ரூ.8.41 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 29 பள்ளி வகுப்பறை கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்துள்ளாா். இதில், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கே.வி.கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில், நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.42.36 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, முதன்மைக் கல்வி அலுவலா்(பொ) கூ. சண்முகம், வட்டாட்சியா் பெரியநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com