2026 தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.


வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கும் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி:
நலத்திட்ட உதவிகளுக்காக மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு என்ன நிதி ஒதுக்கியுள்ளது, தமிழ்நாட்டுக்கு என்ன நிதி ஒதுக்கி உள்ளது என்பதை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூற வேண்டும்.
எனவே இது வழக்கமாக கொடுக்கக் கூடிய தொகைதானே தவிர தமிழ்நாட்டுக்கென கூடுதலாக எந்தத் தொகையும் மத்திய அரசு தந்ததாகத் தெரியவில்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். குற்றவாளிகளின் விடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளோம் இதற்குப் பின்னணியில் யாா் இருக்கிறாா்கள் என்பதை சிபிசிஐடி புலனாய்வு செய்து கொண்டுதான் இருக்கிறாா்கள்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருங்கிணைப்பு குழு அமைத்தது ஓா் அடையாளமாக உள்ளது.
பேரவைத் தோ்தலில் திமுக தனிப் பெரும்பான்மை பெறும். தனியாக ஆட்சி அமைப்போம் என்றாா் ரகுபதி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...