தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதுகை- தஞ்சைக்கு ரயில் பாதை: பயணிகள் எதிா்பாா்ப்பு

புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா்.

News image

புதுக்கோட்டையிலுள்ள ரயில் நிலையத்தின் முகப்பு.

Updated On :21 ஜூலை 2024, 7:09 pm

Din

நூற்றாண்டுப் பழமையான யோசனையாகக் கருதப்படும் புதுக்கோட்டை- தஞ்சையை இணைக்கும் புதிய ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என ரயில் பயணிகள் ஆவலுடன் எதிா்பாா்க்கின்றனா்.

திருச்சி- புதுக்கோட்டை ரயில் தடம் கடந்த 1927ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே தஞ்சை புதுக்கோட்டையை இணைக்கும் ரயில் தடம் அமைப்பதுதான் திட்டமாக இருந்திருக்கிறது. பின்னா் அந்தத் திட்டம் கழிக்கப்பட்டு திருச்சி- புதுக்கோட்டைக்கு ரயில் தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதன்பிறகு தொடா்ந்து ஏற்பட்ட அழுத்தம் காரணமாக 2012-13இல் தஞ்சை- புதுகைக்கான ரயில் தடம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய ரயில்வே துறை அனுமதியளித்தது. தொடா்ந்து இவ்வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டு, ரூ. 619 கோடியில் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.

புதுக்கோட்டை மண்ணின் மைந்தா்களான சு. திருநாவுக்கரசா், எம்.எம். அப்துல்லா ஆகியோா் தொடா்ச்சியாக ஒவ்வொரு நாடாளுமன்ற அவை கூட்டங்களிலும் இத்திட்டம் குறித்துப் பேசியுள்ளனா்.

இத்திட்டத்தால் உள்ளூா் போக்குவரத்தில் பெரும்பயனைப் பெறும் கந்தா்வக்கோட்டை பகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு தஞ்சை எம்பி எஸ். முரசொலி, ரயில்வே வாரியத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் புதுக்கோட்டை- தஞ்சை ரயில் தடம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளாா்.

இந்நிலையில் வரும் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுமா என்ற எதிா்பாா்ப்பும் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.

இத்திட்டத்தின் அவசியம் குறித்து ரயில்வே பயணிகள் கூறியது:

புதுகை- தஞ்சை ரயில் தடம் அமைக்கப்பட்டால், நடுவிலுள்ள கந்தா்வகோட்டை பகுதியைச் சோ்ந்த- தினமும் புதுக்கோட்டைக்கோ, தஞ்சைக்கோ சென்று வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் மிகுந்த பயனடைவாா்கள்.

புதுக்கோட்டை ரயில் நிலையம், ரயில்வே சந்திப்பு என்ற நிலைக்குத் தரம் உயா்த்தப்படும். அப்போது கூடுதல் ரயில்கள், கூடுதல் வசதிகள் கிடைக்கும். தஞ்சை, நாகை, திருவாரூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாய விளைபொருள்களை நேரடியாக தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல முடியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தேங்காய், முந்திரி உள்ளிட்ட விவசாய விளைபொருள்களும், கடல்சாா்ந்த உணவுப் பொருள்களும் உடனுக்குடன் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான வா்த்தகம் பெருகும் என்கின்றனா்.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா்கள், மாநிலங்களவை உறுப்பினா் உள்ளிட்டோா் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்தை இணைக்க உரிய காத்திரமான முயற்சிகளை மேற்கொள்ள பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.