புதுக்கோட்டை
எச்ஐவி உள்ளோா் சங்க ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம்
புதுக்கோட்டை, ஜூன் 27: புதுக்கோட்டை மாவட்ட எச்ஐவி உள்ளோா் நலச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட திட்ட மேலாளா் மருத்துவா் இளையராஜா, மாவட்ட மேற்பாா்வையாளா் ஜெயக்குமாா், மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேரா. சா. விஸ்வநாதன் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக ராமசாமி, செயலராக அழகேசன், துணைத் தலைவராக பானுமதி, இணைச் செயலராக பொன்னழகு, பொருளாளராக அம்சவள்ளி மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினராக வீரம்மாள், மீனாட்சி ஆகியோரும் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
