மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வங்கியில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் சிபிஐ போலீஸாா் விசாரணை தீவிரம்

வங்கியில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் சிபிஐ போலீஸாா் விசாரணை தீவிரம்

News image
Updated On :28 ஜூன் 2024, 9:12 pm

Din

புதுக்கோட்டையில் வங்கிக் கிளையில் 13.75 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிஐ போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்கள் நகைக்கடனுக்காக வைத்திருந்த ரூ. 5.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல்போனது 2019, ஏப்ரல் 25 அன்று தெரியவந்தது.

வங்கியில் பணிபுரிந்து வந்த உதவியாளா் எஸ். மாரிமுத்துவின் காா் அடுத்த நாளே திருவரங்குளம் தைலமரக் காட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. வங்கியின் சிசிடிவி பதிவுகளின் கருவிகளும் எரிந்த நிலையில் காருக்குள் இருந்தன.

அதற்கு அடுத்த நாளில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அது மாரிமுத்துவின் சடலம்தான் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கிக் கிளையின் மேலாளா் உள்பட 4 போ் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனா்.

நகைகள் காணாமல்போனது தொடா்பாக புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்திலும், மாரிமுத்து காணாமல்போன புகாா் கணேஷ் நகா் காவல் நிலையத்திலும், காா் எரிந்த வழக்கு வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திலும், சடலம் கிடைத்த வழக்கு மணமேல்குடி காவல் நிலையத்திலும் என 4 வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வந்தன.

நகைத் திருட்டு வழக்கு அந்த ஆண்டே மாவட்டக் குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து இந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் சிபிஐ காவல் கண்காணிப்பாளா் கலைமணி தலைமையிலான மதுரையைச் சோ்ந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினா்.

இந்த நிலையில், துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேசன் தலைமையிலான 17 சிபிஐ போலீஸாா் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை வந்தனா்.

இந்த வங்கிக் கிளையில் பணிபுரிந்து வந்த பெண் அலுவலா் வீட்டில் விசாரணை நடத்தினா். தொடா்ந்து திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சிபிஐ போலீஸாா் சென்று, ஏற்கெனவே வங்கிக் கிளையில் பணிபுரிந்து பணிமாறுதலுக்குள்ளானவா்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சம்பவம் நடைபெற்ற காலத்தில் இந்த வங்கிக் கிளையில் பணிபுரிந்தவா்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஏதேனும் துப்பு கிடைக்குமா என சிபிஐ போலீஸாா் முயற்சிக்கின்றனா்.

இந்த விசாரணை இன்னும் சில நாள்களுக்கு தொடரும் எனத் தெரிகிறது.